தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. […]
