Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடுகளைப்பற்றி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவற்றிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக், மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை களின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி யே முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. இன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை […]

Categories
அரசியல்

இது என்னப்பா நியாயம்…. அப்போ மூட சொன்ன நீங்களே…. இப்ப திறந்தா எப்படி…!!!

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோவிலை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதுமாக பாஜக சார்பாக 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கோவில்களில் திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கொரோனாவை காரணம் காட்டி நம்முடைய உரிமை மறுக்கப்படும் போது இதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளிகளை திறக்க அரசு முடிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவரே இப்படி பண்ணிட்டாரு…. டாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்த எம்எல்ஏ…. பரபரப்பான திருப்பூர்…!!!

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. இதனால் இப்படி இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி திருப்பூர் கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பக்கத்தில் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி பெண்களுக்கு, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா தொற்றானது நாளுக்குநாள் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் அதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை காண்பித்து மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் அடைப்பு…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை படிப்படியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தி நாளான இன்று மற்றும் மிலாடி நபி நாளான அக்டோபர் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறினாலோ அல்லது […]

Categories
மாநில செய்திகள்

மதுபிரியர்களே… அக்., 2, 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் இயங்காது..!!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் மது பாட்டில் விற்பனை கடைகள், பார்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  

Categories
மாநில செய்திகள்

BREAKING : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு..!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு, ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது. விற்பனையாளர்களின் ஊதியம் 11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின்  ஊதியம் 10,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் அறிவிப்பால் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஏண்டா, டாஸ்மாக்கில் ஸ்டாலின் போட்டோ வைக்கல?….. அடாவடி செய்த திமுக செயலாளர்…. வைரல் வீடியோ…..!!!!

தென்காசியில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஏன் இல்லை என்று திமுகவினர்  சண்டை போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளரார் ரவிசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கடையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அகற்ற கூறி வாக்கு வாதம் செய்தார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை எடுத்துவிட்டு தமிழக  முதல்வர் ஸ்டாலின் படத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் ரூபாய் 10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு தடுப்பூசி முகாம்…. டாஸ்மாக் பக்கத்திலேயே…. அடடே வானதி செம ஐடியா…!!!

குடிமகன்களுக்கு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு இலவச […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஆப்பு…. தடுப்பூசி போட்டால் தான் சரக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.  இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு…. நாளை முதல் அமல்…!!!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்ந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலாகிறது.  ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட  மதுபானங்களை டாஸ்மாக் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது,

Categories
மாநில செய்திகள்

குடிமகன்கள் ஷாக்! செப்-1 ஆம் தேதி டாஸ்மாக் அடைப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 13 மதுபான கடைகள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் நேரம் குறைப்பு… வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கோவையில் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோவையில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை நேரத்தை குறைக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஊரடங்கு… டாஸ்மாக் கடைகள்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவால் டாஸ்மாக் கடைகள் காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசு பரபரப்பு உத்தரவு…!!!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடுகிற ஒன்பது இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடைவீதி, கொத்தவால்சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகளை மூடி உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நீட்டிப்பு…. குடிமகன்கள் செம குஷி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த மதுபிரியர்கள்…. ஒரே நாளில் மட்டும்…. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை….!!

திண்டுக்கல்லில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை அடுத்து மது வாங்குவதாகக ஏராளமானனோர் திரண்டு வருகின்றனர்  தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மது கடைகளும் செயல்பட்டு விற்பனை நடைபெறுகின்றது. இந்த மதுபான கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சலூன் கடைகளுக்கு அனுமதி…. டாஸ்மாக்கிற்கு அனுமதியில்லை…. அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் – புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் நேற்று  ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் படிப்படியாக குறைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுறைகண் உடனிருந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்துள்ளார்.  இதனையடுத்து பிரதமருடனான 25 நிமிட சந்திப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

டாஸ்மார்க் திறக்காத மாவட்டங்களில் மது கடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக சில மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில், […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் திறப்பு வாபஸ்…? – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு இருந்ததால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க வாய்ப்பு – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: டாஸ்மாக் மட்டும் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் டாஸ்மாக் கடைக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. இந்த கடைகள் மட்டும் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் திறக்க தடை… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று டாஸ்மாக் மட்டும் கிடையாது…. கவலையில் குடிமகன்கள்…!!!

தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீர்…. டாஸ்மாக் கடைகளின் நேரம் நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் கடைக்கும் டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் விற்பனை நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்று மாற்றி […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் இரவு 9 மணி வரை மட்டுமே…. ஞாயிறு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் நேரத்தை குறைக்க… தமிழக அரசுக்கு கோரிக்கை…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு..!!

தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு தொகுதியாக என்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தினங்களான ஏப்ரல் 6 மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் 4 மற்றும் 5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் வசூல்… கொள்ளை கும்பலின் கைவரிசை… கதறும் ஊழியர்…!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில்  மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – நாளை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்..!!

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. அதில், குடிமகன்களுக்கு முக்கியமாக மதுபானக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.. அதன்படி, டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது – ஐகோர்ட் அதிரடி.!!

டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது..  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  தற்போது 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கிறது. இதனிடையே ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிருக்கு” சாமியான பந்தல், மைக்செட்டுடன்…. நாளை முதல்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாமியான பந்தல், மைக் செட் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் நாளை டாஸ்மாக் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது   தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து  அணைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்கி வந்தன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு மதுக்கடைகள் திறப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை சாமியானா பந்தல், மைக்செட் போன்ற ஏற்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி காசு வேண்டாம் கிரெடிட் கார்டு போதும்… ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தும் டாஸ்மார்க்…!!

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு மின்னணு இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர் கிலொஷ்குமார் வெளியிட்ட செய்தியில் தமிழக மாநில வாணிபக் கழகம் சார்பில் 5330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக 7 வங்கிகள் கலந்து கொண்டன. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்ற வங்கிகளை விட ஒப்பந்தப்புள்ளி தொகையை குறைவாக குறிப்பிட்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி…. நீதிமன்றம் முக்கிய உத்தரவு…. குஷி ஆன தமிழக அரசு …!!

கொரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை  திறந்துவைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா நடவடிக்கை : ஆகஸ்ட் 1 வரை திறக்க கூடாது….. அதிரடி உத்தரவு….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், ஆரம்ப காலகட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாகவே […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31ஆம் தேதி வரை அதிரடி உத்தரவு – தஞ்சாவூரில் நடவடிக்கை …!!

தமிழகத்தில் கொரோனாவின் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையை மையமாக கொண்டு வேகமெடுத்து கொரோனா தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது மக்களின் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3985 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 83 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1245 ஆக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோயில் அருகே மதுபானக் கடை… உடனே மூடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

கோயில், நூற்பாலை அருகே உள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில் கோயில், நூற்பாலை இயங்கிவருகிறது. இப்பகுதியில் முன்பே மதுபான கடை இயங்கி வந்துள்ளது. மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மதுபான கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால்  மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். கோவில் நூற்பாலை […]

Categories

Tech |