டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர்-ஏர்வாடி மெயின் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பியான்விளை பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் வேகமாக 2 […]
