டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏத்தாப்பூர் அரசு டாஸ்மாக் கடையில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோகனை வழிமறித்த ஒரு கும்பல் அவரிடம் இருந்த 6 லட்சத்து 11 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
