டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என அவரது தந்தை சௌந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். […]
