கோவில்பட்டியில் உள்ள ஆனந்தா விடுதியில் தமிழக அரசு டாஸ்மாக் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மரகத லிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டார். வருகிற 27-ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து […]
