டாஸ்மாக் பார்களுக்கு உடனடியாக டெண்டர் நடத்தாவிட்டால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை அரசு எடுத்து நடத்தினாலும் பார்கள் தனியாருக்குதான் ஏலம் விடப்படுகின்றன. அதில் அவ்வப்போது ஏலம் நடத்தப்படுவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அரசுக்கு வருவாய் என்பது ஒரு மாதத்திற்கு சென்னையில் மண்டலத்தில் ஆறு மாவட்டத்தில் மட்டும் 11 […]
