உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் அடிப்படையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52), முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மூத்தபோலீஸ் அதிகாரி கூறியதாவது “உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் 45 வயதான சந்தீப் அடிக்கடி […]
