டெல்லியில் மண்டோலி சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கைதிகளின் உடல் நிலையை பரிசோதனை செய்ய சிறைக்கு சென்றிருந்தார். அப்போது ஒவ்வொரு கைதிகளின் உடல் நிலையை அவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர் திடீரென பெண் டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரை கற்பழிக்க முயன்றார். […]
