ஈரோடு அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் வசித்து வருபவர் காளியண்ணன். இவருடைய மனைவி 69 வயதுடைய வள்ளியம்மாள். இவர் ஈரோடு பேருந்து நிலையம் செல்வதற்காக நேற்று காலை சென்னிமலை சாலை கே.கே நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அறச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் அரசு டவுன் பேருந்து வந்துள்ளது. அந்த அரசு பேருந்தில் வள்ளியம்மாள் ஏறினார். […]
