டயர் கடையில் பணம், கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டயபுரம் பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம், […]
