தாலிபான்கள் உள்பட யாரையும் தான் நம்புவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிலை குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா ? என்பதை நாங்கள் பார்த்து கொண்டிருக்கத்தான் போகிறோம் என்றார். தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், தாலிபான்கள் உள்பட யாரையும் நம்பவில்லை என்று அதிரடியாக பதிலளித்தார். மேலும் பேசிய அவர் நான் உங்களை […]
