ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான சந்திப்பாகும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையை தன்னகத்தே கொண்ட ஒரு தொகுதி. 2011 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தனி சட்டமன்ற தொகுதியாக உருவானது. இதுவரை இரண்டு தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகும். நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் […]
