ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார். உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் […]
