ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு நாளை வரை நீடித்து உள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாகாணம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு 4 காவல்துறையினர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு […]
