ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். தனவரவு சீராக இருக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். புத்தி சாதுர்யத்தை வெளிப்படுத்துங்கள். […]