மகரம் ராசி அன்பர்களே…! தேவைக்கு அதிகமாக இன்று பணம் சேரும். பணம் சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வாக்குவன்மை வளம் பெருகும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது மனதிற்கு நிம்மதியை தரும். கணவன் மனைவி இடையே இடைவெளி குறைய மனம் விட்டுப் பேச வேண்டும். உங்களின் செயலில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வீக பக்தி கூடும். ஆன்மீக நாட்டம் செல்லும்.கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணம் இருக்கும். […]