இன்றைய பஞ்சாங்கம் 31-03-2021, பங்குனி 18, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 02.06 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சுவாதி நட்சத்திரம் காலை 09.45 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 31.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ரிஷபம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த […]