நாளைய பஞ்சாங்கம் 12-02-2021, தை 30, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 12.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் […]
