சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடுமையான உழைப்பால் உங்களுடைய தனவரவு நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் பன்மடங்கு உயரும். ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே அமையும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று உடல்நிலையில் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் இருக்கும். அந்த பயணங்கள் ஓரளவு சுமாரான பலனையே கொடுக்கும். […]
