44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை அடுத்த மாமல்லபுரம் பூந்தேரி கிராமத்தில் நட்சத்திர ஓட்டல் அருகில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. செஸ் ஒலிம்பியாட் தொடர்பான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவங்கி வைத்துள்ளனர். முன்னதாக ஒலிம்பியாட் ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக மாமல்லபுரத்திற்கு வந்தடைந்தது. […]
