இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான சூழல் நிலவிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை ஐசிசி பாராட்டியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸை தடுக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு […]
