ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாக உள்ளதாக, அணியின் இயக்குனரான குமார சங்ககாரா கூறியுள்ளார் . நேற்றுமுன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான்- பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இதில் ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வலது கையில், அறுவை சிகிச்சை செய்துள்ளதால், ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் அவர் […]
