ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]
