ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதும் சசிகலா அங்கு செல்வார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நேற்று சசிகலா […]
