ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]
