மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரச்சனையை உலக பிரச்சனைகளாக நினைக்கும் மனநிலையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். ஸ்லோவேகியா என்னும் ஐரோப்பிய நாட்டின் தலைநகரான பிரஸ்லாவாவில், நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்ய போரில் இந்தியா யார் பக்கம்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் தெரிவித்ததாவது, இந்தியா மீது இவ்வாறான கட்டமைப்பை திணிப்பதற்கு முயற்சி நடக்கிறது. இந்தியா, யார் பக்கமும் சாய தேவையில்லை என்று […]
