மதுரையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தான் வளர்த்து வந்த சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து குடும்பத்துடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி தனது செல்லப் பிராணியான சுஜித்க்கு ஐந்து வகை உணவுகளான தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்டவைகளை வைத்து, மாலை […]
