மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பின் தளபதியாக செயல்படும் ஆஷிக் அகமது நெங்ரூ, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து, நாட்டின் இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாத செயல்களை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் கைப்பாவையாக இருந்து, நமது நாட்டை சீர்குலைக்கும் செயல்களை செய்து வருகிறார். இதனால் நாட்டின் அமைதியை கெடுக்கும் நெங்ரூ, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது
