ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்தத் திரைப்படம் ஆக்கத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும், […]
