சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், “ஜெயித்துக்காட்டுவோம் வா” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேச்சாளர் சுகி சிவம், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை […]
