அரசியல் குழப்பம் நீடித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள்,ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் நகருக்கு நேற்று இடம் மாறினர். அதிர்ப்தி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களது எம்.எல்.ஏக்கள் அனைவரும், கடந்த 13 ஆம் தேதியிலிருந்து ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களில் 550 கிலோ […]
