ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான் பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது. ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். […]
