விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய்க்கு அவரது வீட்டில் தீவிரமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகைகள் அஞ்சலி மற்றும் வாணி போஜன் ஆகியோருடன் காதல் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், […]
