ஜெயில் கைதி முருகன் பரோல் கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர் முருகன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு பரோல் கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார். நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது, உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அவர் முறையாக எந்த கடிதமும் கொடுக்கவில்லை. மேலும் ஜெயில் உணவை தவிர்த்துவிட்டு பழங்கள், கீரையை அவர் […]
