முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், சில மாதங்கள் அமைதியாக இருந்தார். இதன் பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவ்வப்பொழுது ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகவை மீண்டும் வழிநடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், இதையொட்டி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் இவ்வளவு நாட்களாக […]
