ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். இதில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் […]
