அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சிலையை பராமரிப்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தன் வாழ்வையே அர்பணித்துள்ளார், இவரை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையானது சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 28.1.2021 அன்று திறந்து வைத்ததுடன் அந்த வளாகத்திற்கு ‘அம்மா […]
