மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் […]
