உலகின் மிகப்பெரிய ஜெயன்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாயும் யாங்சே ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உலகிலேயே மிகப்பெரியதான ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 233 அடி உயரத்தில் மலையைக் குடைந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளை கொண்டு வெள்ள நீரை தடுத்து வருகின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய […]
