ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு கட்டிடக்கலையின் சான்றாக விளங்குகிறது. நிலக்கரி படிமம் அதிக அளவில் கிடைக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 4 முறை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மற்றும் பாமக தலா 1 […]
