தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொருத்தவரை, சரியான கட்டமைப்பை உருவாக்குவதில் திமுக தவறிவிட்டது என்றும், தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு சரி இல்லை. அதில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. இரண்டாவது சட்டம் ஒழுங்கை சரி செய்து, நிம்மதியான ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உரிய ஒரு நிலையை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தவறிவிட்டது. தமிழகம் இன்று போதை மாநிலமாக […]
