செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை. ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. […]
