கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]
