தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். […]
