புதிய கொரோனா வைரஸை கண்டுபிடிக்க குறைந்தது 24 மணி நேரமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் மிக வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதனை அடுத்து இந்த புதிய வைரஸ் 70% அதி வேகமாக பரவக்கூடியது என இங்கிலாந்து அரசு தெரிவித்தது. இதற்கு இடையே இங்கிலாந்து-இந்தியா விமான போக்குவரத்து நேற்று முதல் தடை செய்யப்பட்டது. எனினும், கடந்த சில தினங்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. […]
