தமிழக அரசு பொய் கூறுவதாக கூட்டணி கட்சியே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மட்டுமல்லாமல் வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் பெருமளவு பழுதடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் ஏக்கர் […]
