கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜில்பீருக்கு மதுபிரியர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரை பயன்படுத்தி பீர் தயாரிக்கப்பட்டு, “நியூப்ரூ” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன் மூலமாக வடிகட்டப்பட்ட சுத்தமான நீராகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்டின் பெயர்தான் நியூவாட்டர் எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். […]
