சட்டம் இரு மொழி பயன்பாடு குறித்து பேசும் போது நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவிற்கு இந்தி மட்டும் என்ற உறுதிமொழி தருகின்ற அதிகாரம் யார் கொடுத்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி ஜிப்மர் அலுவல்மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்டமீறல் ஆக அமைந்துள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இரண்டு சுற்றறிக்கைகளை […]
