வங்க கடலில், ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, புயலாக மாறியது. மத்திய மேற்கு வங்க கடலில் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும். டிசம்பர் 5-ஆம் தேதி ஒரிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
